Wed, Aug 05, 2026 02:32 AM

நள்ளிரவில் கிடாக் கறி விருந்து ... அரிவாள் மீது சாமியாடிகள் அருள்வாக்கு

Posted by admin on 29-07-2026


நள்ளிரவில் கிடாக் கறி விருந்து ... அரிவாள் மீது சாமியாடிகள் அருள்வாக்கு

நள்ளிரவில் கிடா கறி விருந்து, அருவாள்மீது நின்று சாமியாடிகள் அருள்வாக்கு


சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி அருகே வடகரையில் அமைந்துள்ள முத்தையா கோவிலில் ஆடிப்பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய ஆடிப்படைப்பு திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி முத்தையா சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் பக்தர்களுக்கு பாரம்பரிய முறையில் கிடா கறி விருந்து வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பிரசாதமாக உணவருந்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக சாமியாடிகள் கூர்மையான அருவாளின் மீது ஏறி நின்று, பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினர். குடும்ப நலன், விவசாயம், மழை, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அருள்வாக்கு கூறப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆன்மிக நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கோவில் வளாகம் விழாகோலமாக காட்சியளித்தது.  ஆடிப்பௌர்ணமி ஆடிப்படைப்பு திருவிழா பக்தி, பாரம்பரியம் மற்றும் கிராமிய ஆன்மிக மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அதிகாலை நிறைவடைந்தது.

Share: 8 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.