Posted by admin on 07-07-2026
மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நெட்டூர் கண்மாயில் புலிக்குளம் நாட்டு இன மாடுகளை மேய்த்து வரும் கீதாரி சமூகத்தினர், மாட்டுச் சாணத்தை சேகரித்து காயவைத்து 60 கிலோ மூட்டைகளாக கேரளாவுக்கு விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு மூட்டை ரூ.120 வரை விற்பனையாகும் இந்தச் சாணம், கேரளாவின் ஏலக்காய், காபி, மிளகு தோட்டங்களில் இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது.
மேய்ச்சல் நிலங்கள் குறைவு, வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கால்நடை நோய்கள் உள்ளிட்ட சவால்களால் பாரம்பரிய தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கீதாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்கவும், கால்நடைகளுக்கு உடனடி மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலிக்குளம் மாடுகளின் பாலை விற்பனை செய்யாமல் தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கும் கீதாரிகள், பாரம்பரியத்தையும் மனிதநேயத்தையும் காத்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர்
உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி வீரர்
காரைக்குடி இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் மு.பிரனேஷ், நடப்பு உலக சதுரங
காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு
காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை
கனிம வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட
தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு
தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு (18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு) காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி
Leave a Comment
Your comment will be visible after admin approval.